Categories
சினிமா தமிழ் சினிமா

என்னை வாழவைக்கும் தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்…. சற்றுமுன் ரஜினி வெளியிட்ட அறிக்கை…!!!!

என்னை வாழவைக்கும் தமிழ் மக்களுக்கு இந்த தாதா சாகேப் பால்கே விருதை சமர்ப்பிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாங்கம் திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கி கௌரவித்தது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மத்திய அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ள திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை என்னை உருவாக்கிய என்னுடைய குருநாதர் திரு கே பாலச்சந்தர் அவர்களுக்கும், என்னுடைய அண்ணன் சத்தியநாராயண ராவ் அவர்களுக்கும், என்னுடைய நண்பர் திரு ராஜ்பகதூர் அவர்களுக்கும், என்னுடைய திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில் கலைஞர்கள், சக நடிகர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் மற்றும் என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |