Categories
மாநில செய்திகள்

என்னை விடுதலை செய்யுங்கள்… சிறை நிர்வாகத்திடம் சசிகலா மனு…!!!

சசிகலாவின் தண்டனை காலம் ஜனவரி மாதம் 27-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்றும் அபராத தொகை 10 கோடி ரூபாயை செலுத்தாத பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை நீட்டிக்கப்பட்டு 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி வரை அனுபவிக்க வேண்டும் என்றும் கர்நாடக சிறைத்துறையில் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சசிகலா சிறைக் கைதிகளுக்கான நன்னடத்தை மற்றும் விடுமுறை காலம் என்பதால் சலுகைகளை பெற்று முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து  10 கோடி ரூபாய் அபராதத் தொகையை சசிகலா வழக்கறிஞர் பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில் சசிகலா சிறை அதிகாரிகளிடம் முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என விண்ணப்பித்துள்ளார். அவரின் விண்ணப்பத்தை மத்திய சிறை அதிகாரிகள் சிறைத் துறைக்கு அனுப்பி உள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் தற்போது வரை எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. மேலும் விண்ணப்பத்தின் மீது எடுக்கப்படும் முடிவு நிலுவையில் உள்ளது என சில மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே சசிகலா எந்த ஒரு நிவாரணத்தையும் பெறவில்லை என்றால், தனது தண்டனையை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி நிறைவு செய்வார்.

Categories

Tech |