Categories
மாநில செய்திகள்

“என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி”… அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்…!!

என்னை வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி என்று அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 23,644 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை பல முறை நிறுத்தப்பட்டதால், முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஜய பாஸ்கர் விராலிமலை தொகுதி மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் இந்த வெற்றிக்கு மக்கள் தன்மீது வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையை காரணம் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |