பாவனாவை வலைதளங்களில் ட்ரோல் செய்ததால் வருத்தம் அடைந்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பாவனா சில வருடங்களுக்கு முன்பாக கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கினார். தற்போது ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் “என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு” என்ற மலையாள திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கின்றார் அண்மையில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்தது. அப்போது விழாவில் பங்கேற்க வந்த பாவனா அணிந்திருந்த உடை இணையத்தில் ட்ரோல் செய்யப்பட்டது.
இதற்கு பாவனா வருத்தப்பட்டு பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, ஒவ்வொரு நாளும் எல்லாம் சரியாகிவிடும் என எனக்குள் சொல்லிக் கொண்டு வாழ முயல்கிறேன், என் அன்புக்குரியவர்களே காயப்படுத்தக் கூடாது என நினைத்து சோகத்தை தவிர்க்க முயற்சிக்கிறேன். எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சிப்பவர்கள் இருப்பதை அறியும்போது வேதனையளிக்கின்றது. இது போன்ற செயல்களால் அவர்கள் சந்தோஷம் காண விரும்பினால் நான் அவர்களை தடுக்கவில்லை என வேதனையுடன் பதிவிட்டிருக்கின்றார்.