என்னை வைத்து தாராளமாக மீம்ஸ் போடுங்கள் என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய காலகட்டத்தில் முக்கிய பிரபலங்களை வைத்து மீம்ஸ் போடுவது வழக்கமாகிவிட்டது. சமூகவலைத்தளங்களில் அவ்வாறு போடப்படும் மீம்ஸ் பலரும் கண்டு களிக்கின்றனர். அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள் மற்றும் திரைப் பிரபலங்கள் என முக்கிய பிரபலங்களை மட்டும் விமர்சித்து அதில் மீம்ஸ் போடப்படுகிறது. அவ்வாறு போடப்படும் மீம்ஸ்-க்கு பலர் ஆதரிப்பதும் உண்டு வெறுப்பதும் உண்டு.
இந்நிலையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன், என்னை வைத்து மீம்ஸ் போடுங்கள் உங்களுக்கு வருமானம் வருகிறது என்றால் தாராளமாக மீம்ஸ் போடுங்கள் என்று தெரிவித்துள்ளார். என்னை வைத்து மீம்ஸ் போட்டால் அதிக பார்வையாளர்கள் பார்ப்பதாக சொல்கின்றனர். எனக்கு அவமானம் உங்களுக்கு வருமானம் என்றால் தாராளமாக மீம்ஸ் போடுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.