Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களை உன் கணவரிடம் காட்டுவேன்”..? நடிகை மரண வழக்கில் அதிரடி திருப்பம்…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கிய வைஷாலி தாக்கருக்கு சமீபத்தில் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றது. இந்த நிலையில் வைஷாலி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின் அவரது முன்னாள் காதலன் தன்னை துன்புறுத்தியதாக வைஷாலி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். வைஷாலியின் முன்னாள் காதலன் ராகுல் என்பதும் அவர் பக்கத்து வீட்டில் வசித்து வந்ததும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் வைஷாலி தூக்கில் தொங்கியதும் அவரது முன்னாள் காதலன் தப்பி ஓடி விட்டார்.

இதனை அடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடி போலீச கைது செய்துள்ளனர். மேலும் அவரது மனைவி தலைமறைவாகிவிட்டார் இந்த சூழலில் தற்கொலைக்கான காரணத்தை வைஷாலியின் நெருங்கிய நண்பரான நிஷாந்த் சிங் மல்கானி என்பவர் கூறியுள்ளார். அதாவது அவர் பேசியபோது வைஷாலி உடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி ராகுல் மிரட்டி இருக்கிறார். உனக்கு திருமணமானதும் என்னோடு நெருக்கமாக இருந்த புகைப்படங்களை உனது கணவரிடம் காட்டுவேன் என தெரிவித்துள்ளார். வைஷாலி எங்கேயும் நகர விடாமல் சித்திரவதை செய்திருக்கின்றார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வைஷாலி தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என அவர் கூறியுள்ளார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Categories

Tech |