மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த எட்டு வயது சிறுமி பர்வாணி. இவருடைய வீட்டிற்கு தந்தையின் நண்பர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். இவர் வீட்டுக்கு வரும்போதல்லாம் சிறுமியிடம் கொஞ்சி விளையாடி செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று தன்னுடைய தந்தை வருவதற்காக வீட்டுக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தார்.அப்போது அங்கே வந்த தந்தையின் நண்பர் என்னுடன் வா அப்பாவிடம் கூட்டி செல்கிறேன் என்று கூறியுள்ளார். சிறுமியும் தந்தையின் நண்பர் என்பதால் அவரரோடு சென்று இருக்கிறார்.
ஆனால் அவர் இடிந்து கிடந்த ஒரு இடத்திற்கு கடத்திச் சென்று அங்கு வைத்து மிரட்டி குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துளார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் இதை பார்த்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். பின்பு அந்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.