Categories
தேசிய செய்திகள்

“என்னோட தங்கச்சிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு”… மகிழ்ச்சியில் அண்ணன் செய்த காரியத்தை நீங்களே பாருங்க…!!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தன் தங்கைக்கு பெண் குழந்தை பிறந்ததை கொண்டாடும் வகையில் அப்பெண்ணின் அண்ணன் இலவசமாக பெட்ரோல் வழங்கி கொண்டாடி வருகிறார்.

மத்திய பிரதேச மாநிலம், பீட்டல் மாவட்டத்தைச் சே்ந்தவர் தீபக் சைனானி என்பவர் ஒரு பெட்ரோல் பங்கு வைத்துள்ளார். இவர் தனது தங்கை ஷிக்கா போர்வல் என்பவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது, நவராத்திரியில் இந்த குழந்தை பிறந்த காரணத்தினால் அதனை கொண்டாட முடிவு செய்த அவர் தனது பெட்ரோல் பங்கில் இலவசமாக பெட்ரோல் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார்.

அதன்படி கடந்த 13ம் தேதி முதல் 15ஆம் தேதிக்குள் பெட்ரோல் போட வரும் அனைவருக்கும் 100 ரூபாய்க்கு மேல் பெட்ரோல் போடுபவர்களுக்கு 5 சதவீதமும், 200 முதல் 500 க்கு பெட்ரோல் போடுபவர்களுக்கு 10 சதவீதமும் அதிகமாக பெட்ரோல் போடப்படும் என தெரிவித்தார். அதுமட்டுமில்லாமல் காலை 9 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மட்டுமே இந்த ஆஃபர் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதை அறிந்த பலரும் அந்த பெட்ரோல் பங்குக்கு சென்று பெட்ரோல் போட்டு வருகின்றன. இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Categories

Tech |