Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

என்னோட படத்தில் மீண்டும் அவங்களா….? “இயக்குனர் மீது கோபப்பட தனுஷ்”… காரணம் என்னவாக இருக்கும்….???

ஒளிப்பதிவாளராக மீண்டும் யாமினியை புக் செய்ததால் இயக்குனர் மீது தனுஷ் கோபப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் தனுஷ். இவர் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்து வந்த நிலையில் சமீபத்தில் இதன் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இதையடுத்து அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தை செல்வராகவன் இயக்க தனுஷ் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைக்க கலைபுலி எஸ் தாணு தயாரிக்கிறார். இத்திரைப்படத்திற்கு முதலில் ஒளிப்பதிவாளராக யாமினியை ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களிலேயே சில காரணங்களால் படத்திலிருந்து யாமினி விலகினார்.

இந்த நிலையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக யாமினியை புக் செய்து இருக்கின்றார் அருண் மாதேஸ்வரன். இதை அறிந்த தனுஷ் ஏற்கனவே அவருக்கும் எனக்கும் ஒத்து வராத காரணத்தினால் தான் நானே வருவேன் திரைப்படத்திலிருந்து அவரை மாற்றினோம். இந்த நிலையில் மீண்டும் நான் நடிக்கும் திரைப்படத்தில் அவர் மறுபடியுமா என அருள் மாதேஸ்வரனிடம் கோபப்பட்டு இருக்கிறார் தனுஷ். இதனால் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மாற்றப்பட இருப்பதாக பேசப்படுகின்றது. இதை அறிந்த ரசிகர்கள் தனுஷ் யாமினி மீது கோபப்படுவதற்கு காரணம் என்ன என கேட்டு வருகின்றனர்.

Categories

Tech |