Categories
தேசிய செய்திகள்

என்னோட பொண்ண விட்டுடுங்க… ப்ளீஸ்… தூணில் கட்டி வைத்து பெற்றோர் கண்முன்னே… 8 பேர் சேர்ந்து செய்த கொடூரம்…!!!

பெற்ற மகளை பெற்றோர்களின் கண்முன்னே 8 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோக மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சிறுமியின் சகோதரன் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவரவே அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். தங்கள் வீட்டுப் பெண் ஓடி விட்டதை அறிந்த சகோதரர்கள் அந்த தங்கையின் காதலன் வீட்டிற்கு சென்று பொருள்களையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர்.

அதுமட்டுமில்லாமல் அந்த வீட்டிலிருந்த காதலனின் தங்கையை பிடித்து ஒரு தூணில் கட்டி வைத்து அங்கு வந்த அனைவரும் அப்பெண்ணின் பெற்றோர்கள் முன்னிலையில் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண்ணின் பெற்றோர்கள் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |