Categories
மாநில செய்திகள்

என்னோட மனைவி வந்தா தான் கீழே இறங்குவேன்….. செல்போன் கோபுரத்தில் ஏறி…. மிரட்டல் விடுத்த கொத்தனார்….!!!

மனைவியை அழைத்து வந்தால் தான் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்குவேன் என்று மிரட்டல் விடுத்த கொத்தனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை, திருவொற்றியூர் சிவசக்தி நகர் பகுதியில் சேர்ந்த செந்தில் குமார் என்பவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி வடிவுக்கரசி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. கொத்தனார் செந்தில்குமார் அடிக்கடி குடித்துவிட்டு மனைவியை சந்தேகப்பட்டு சண்டை போட்டு வந்துள்ளார். இதனால் கடந்த மாதம் மனைவி கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுள்ளார் .பலமுறை மனைவியை சமாதானப்படுத்த முயன்றும் அவர் வீட்டிற்கு வரவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்து செந்தில்குமார் இன்று காலை திருவெற்றியூர் பஸ் நிலையம் அருகே உள்ள 200 அடி பிஎஸ்என்எல் செல்போன் கோபுரத்தில் ஏறி நின்று கொண்டு காலை 6 மணி அளவில் செல்போன் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது தனது மனைவியுடன் தன்னை சேர்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தால் தான் கீழே வருவேன் என்று கூறியுள்ளார்.

இதை எடுத்து மீஞ்சூர் அருகே உள்ள நந்தனம்பாக்கத்தில் இருந்து செந்தில்குமார் மனைவியை போலீசார் அழைத்து வந்தனர். மனைவியை பார்த்தவுடன் செந்தில் குமார் கீழே இறங்கி வந்தார். பிறகு அவருக்கு மனநல ஆலோசனை வழங்க அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |