Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னோட முன்னேற்றத்திற்கு இவர்கள் தான் காரணம்”…. நெகிழ்ச்சியுடன் சொன்ன நெல்சன்….  யார் அவர்கள் தெரியுமா?….!!!

இயக்குனர் நெல்சன், அனிருத்தின் ஒத்துழைப்பு தனது சினிமா பயணத்தின் வெற்றிக்கு காரணாமாக உள்ளது என கூறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் நெல்சன். இவர் அடுத்து அடுத்து முன்னணி நடிகர்களை வைத்து படங்களை இயக்கி வருகிறார். இப்போது இவர் பீஸ்ட் படத்தை இயக்கிய நிலையில் அடுத்ததாக ரஜினியின் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி இருக்கிறது. நெல்சன் தனது நான்காவது திரைப்படத்திலேயே ரஜினியை வைத்து இயக்கப்போவது இவரின் மாபெரும் வெற்றியாகும். இவரின் வெற்றிக்கு துணை நின்றவர்களை பற்றி பார்க்கலாம். நெல்சன் முதல் முதலில் தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் துணை இயக்குனராக பணிபுரிந்தார்.

அடுத்ததாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இயக்க ஆரம்பித்தார். இவர் ஜோடி, சூப்பர் சிங்கர், பிக்பாக்ஸ் முதலிய நிகழ்ச்சிகளை இயக்கியனார். மேலும் முன்னணி நடிகர்களை இயக்க ஆரம்பித்தார். நெல்சன் ஜோடி நிகழ்ச்சியை இயக்கும் போது அதில் நடுவராக பங்கேற்றார் சிம்புவுடன் பழக்கம் ஏற்பட்டது. அப்பொழுது சிம்புவிற்கு கதை ஒன்றைக் கூறினார். அது சிம்புவிற்கு மிகவும் பிடித்தது. அப்படத்தில் சிம்பு, ஜெய், ஹன்சிகா உள்ளிட்ட நடிகர்கள் நடித்து இருந்தனர். இப்படத்தின் பாதி படப்பிடிப்பு முடிவடைந்தது. ஆனால் சில தவிர்க்க முடியாத சூழ்நிலையால் இப்படம் கைவிடப்பட்டது.

அதனால் இவர் மீண்டும் விஜய் தொலைக்காட்சிக்கு சென்றார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நயன்தாராவிற்கு கதை சொல்லும் வாய்ப்பு கிட்டியது. இவர் கூறிய கதை நயன்தாராவுக்கு பிடித்துப்போக இவர் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் 2018ஆம் ஆண்டு லைக்கா நிறுவனம் தயாரிப்பில் வெளியானது. இவர் முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை கண்டார்.

அடுத்தடுத்து டாக்டர்,பீஸ்ட் என முன்னணி நடிகர்களை வைத்து இயக்கினார். விஜய் டிவியில் பணியாற்றும்போது சிவகார்த்திகேயன் அவர்களின் நட்பு இவருக்குக் கிடைத்தது. சிவகார்த்திகேயனின் மூலமாக அனிருத்தின் நட்பு இவருக்கு கிடைத்தது. இவரின் மூலம் லைக்கா நிறுவனத்திடம் கோலமாவு கோகிலா கதையைக் கூறி படத்தை இயக்கி இருக்கிறார். “எனது வெற்றிக்கு அனிருத் தொடக்கப் புள்ளியாக இருந்து இருக்கிறார்” என நெல்சன் பல பேட்டிகளில் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |