படத்தில் நடித்த போது வலது காலில் பலத்த அடி ஏற்பட்டதால் காலை எடுக்க வேண்டும் என டாக்டர் கூறியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகர் ஜான் ஆபிரகாம்.
பாலிவுட்டின் பிரபல நடிகரான ஜான் ஆபிரஹாம் நடிப்பில் சென்ற 2014 ஆம் வருடம் வெளியான திரைப்படம் ஃபோர்ப்ஸ் 2. இந்தப் படத்தில் நடிக்கும் போது இவருக்கு முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை செய்து, வலது காலை அகற்ற வேண்டும் என டாக்டர்கள் கூறியதாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் பேட்டியில் கூறியுள்ளதாவது சில சண்டை காட்சிகள் மிகவும் ஆபத்தானது. அதுபோலத்தான் இந்தப் படத்தில் நடித்தபோது எனக்கு பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது.
இதுக்காக மூன்று முறை அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. எனது வலது காலில் குடலிறக்கப் பாதிப்பு இருந்ததால் டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மேலும் காலை முழுவதுமாக அகற்ற வேண்டும் என என்னிடம் கூறியபோது நான் முடியாது என கூறினேன். அதன் பின் மும்பையில் உள்ள ராஜேஷ் மணியார் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் என் முழங்காலை காப்பாற்றினார், நான் அதிர்ஷ்டசாலி எனவும் கூறினார். தற்போது நான் நலமாக இருக்கிறேன், நன்றாக உட்காருகிறேன், நடக்கிறேன், எழுந்திருக்கின்றேன். அப்போது இருந்ததை விட இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறேன் என்றும் மேலும் நான் தொடர்ந்து ஆக்ஷன் திரைப்படங்களில் நடிப்பதையே விரும்புகிறேன் என கூறியுள்ளார்.