பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும், ரவீந்தரும் கடந்த 1-ம் தேதி திருமணம் செய்து கொண்ட நிலையில், இணையதளத்தில் எப்போது பார்த்தாலும் ரவீந்தர் மற்றும் மகா பற்றிய செய்திகள் தான் உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது மகாலட்சுமி ரவிந்தரை பணத்துக்காக தான் திருமணம் செய்து கொண்டார் என்று சிலர் கூறிய போது அதை ரவீந்தர் மறுத்தார். அதோடு வனிதா-பீட்டர்பால் திருமணம் போன்று இதுவும் சீக்கிரம் முடிந்துவிடும் என்றும் சிலர் கூறுகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டா லைவில் வந்த ரவீந்தர் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் நாங்க ரொம்ப சந்தோஷமா இருக்கோம். யாரோ ஒருவரை பற்றி நான் பேசினேன்.
அவங்க ட்விட்டர்ல ஏதோ எழுதி இருக்காங்க. கர்மா இ எஸ் பி ன்னு என்னத்தையோ போட்டு இருக்காங்க. அதை எனக்கு படிக்க கூட வரல. அத பத்தி எல்லாம் பேச எனக்கு விருப்பமில்லை. என்னுடைய வாழ்க்கை யாருடைய கண்ணீரிலும் தொடங்கல. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ஒரு youtube சேனல்ல மேடமும் சாரும் நல்லாதான் இருக்காங்களா? ஏதோ கோபத்தில் பிரிஞ்சுட்டாங்கலாமே அப்படின்னு ஒரு தகவலை பார்த்தேன். யூடியூப் சேனல் வருவது எல்லாம் உண்மை கிடையாது. அதை புரிய வைப்பது எங்களுடைய வேலையும் கிடையாது. மேலும் எங்களை இனி யாரும் பேட்டி கேட்டு அணுகாதீர்கள் என்று கூறினார்.