Categories
உலக செய்திகள்

என்ன ஆச்சரியம்….!! மனித உருவில் ரோபோவா….? பிரபல நாட்டின் அதிரடி கண்டுபிடிப்பு….!!

பிரம்மாண்ட வடிவில் உள்ள மனித வகையிலான ரோபோ ஒன்று ரயில்வே துறை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

ஜப்பான் நாட்டில் பிரம்மாண்ட வடிவிலுள்ள மனித வகையிலான ரோபோ ஒன்று ரயில்வே துறை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றது. மேலும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த மனித வகையிலான ரோபோ சுமார் 40 கிலோ எடையுள்ள பொருள்களை அசால்டாக பத்து மீட்டர் உயரம் வரை தூக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த  ரோபோ ரயில் இயக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள  நிலையில் மின்கம்பிகளில் ஏற்படும் பழுதுகளை சுலபமாக சரி செய்கிறது.

இதனைப் போன்று ஆபத்தான பணிக்கு இந்த ரோபோ மிகவும் உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது மனிதர்களின் வேலையே மூன்றில் ஒரு பங்கு குறைத்து வருகின்றது. குறிப்பாக இந்த ரோபோவை தற்போது சோதனைக்காக மட்டுமே பயன்படுத்துவதாகவும் 2024 ஆம் ஆண்டு முழுவீச்சில் பயன்படுத்த உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |