1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள லாரி டயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள செட்டிபாளையம் பகுதியில் யோகானந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனக்கு சொந்தமாக லாரி ஒன்று வைத்துள்ளார்.இந்நிலையில் யோகானந்த் அந்த லாரியை கரூர்- மதுரை நெடுஞ்சாலையில் உள்ள பட்டறை ஒன்றில் நிறுத்தி வைத்துள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள லாரி டயர்கள் மர்ம நபர்களால் திருடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
எனவே யோகானந்த் அருகில் உள்ள காவல் நிலையத்தில் லாரி டயர்கள் திருட்டு போனது பற்றி புகார் கொடுத்துள்ளார். இவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து டயர்களை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.