வங்கியில் வாங்கும் வீட்டுக்கடன் EMI உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவில் சொந்த வீடு கனவுடன் பல மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் கனவை நனவாக்கும் விதமாக வங்கிகளில் குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை உயர்த்த போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது உக்ரைன்- ரஷ்யாவிற்கு இடையே போர் நடந்து வருவதால் இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்படுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் விதமாக ரிசர்வ் வங்கி பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வங்கிகளில் வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தியுள்ளது. குறிப்பாக ஜூன் மாதம் நடைபெறும் கூட்டத்தில் குறைந்த அளவு வட்டி கடன் 25 சதவீதம் வரை உயர்த்தப்படும். இதனையடுத்து ஆகஸ்ட் மாதம் நடைபெறும் கூட்டத்தில் கூடுதலாக 25 புள்ளிகள் வட்டி உயர்த்தப்படும். அதன்பிறகு 4 மாதங்களுக்குள் மொத்தமாக 75 புள்ளிகள் வரை உயர்த்தப்படும். இந்த வீட்டுக்கடன் EMI அதிகரிப்பினால், மற்ற கடன்களுக்கான EMI அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும்.