நடிகை நயன்தாராவின் அண்மையில் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது, அதைப்பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையான நயன்தாராவை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் அழைக்கிறார்கள். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்றவற்றிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். மேலும், பாலிவுட்டில் இயக்குனர் அட்லி இயக்கும் திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். சமீபகாலமாக நயன்தாரா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற திரைப்படங்களிலேயே பெரும்பாலும் நடித்து வருகின்றார்.
தற்பொழுது நயன்தாராவினுடைய அண்மையில் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அந்த புகைப்படங்களில் நயன்தாரா தோல் சுருக்கங்களோடு எலும்பு தெரியும் வண்ணம் உள்ளார். நயன்தாரா நடிக்க வந்த பொழுது கொழுகொழுவென இருந்தார். ஆனால் தற்போது சுருக்கங்களோடு இருப்பதை பார்த்த ரசிகர்கள் நயன்தாராவுக்கு வயதாகிறதோ என கேட்கின்றனர். அண்மையில் தனது ரசிகர்களோடு எடுத்த போட்டோக்களை பகிர்ந்துள்ளார் மற்றும் போட்டோ ஷூட்டில் எடுத்த போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எடையை குறைக்கலாம் அதற்காக இவ்வளவு எடையை குறைக்க கூடாது என கூறுகின்றனர்.