நடிகை மியா ஜார்ஜ் தனது கணவருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் நடிகை மியா ஜார்ஜ் ‘அமரகாவியம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இதை தொடர்ந்து இவர் நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து நடித்த இன்று நேற்று நாளை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இதன்பின் இவர் வெற்றிவேல், எமன், ஒரு நாள் கூத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். தற்போது இவர் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கோப்ரா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் . மேலும் கடந்த வருடம் நடிகை மியா ஜார்ஜுக்கு அஸ்வின் பிலிப் என்பவருடன் திருமணம் நடைபெற்றது . இந்நிலையில் மியா ஜார்ஜ் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது .