இசைஞானி இளையராஜா தற்போது படங்களுக்கு இசையமைத்து வருவதுடன் இசை நிகழ்ச்சியும் நடத்திக் கொண்டிருக்கின்றார். அப்படி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தனுஷ் தன் மகன்கள் யாத்ரா, லிங்காவுடன் கலந்து கொண்டு பாடி அசத்தியுள்ளார். தனுஷ் தனது மகன்களுக்காக தாலாட்டு பாடிய வீடியோ வெளியாகி வைரல் ஆகி உள்ளது. ஹங்கேரியில் இசை நிகழ்ச்சியை நடத்த சென்றிருக்கின்றார் இளையராஜா. இந்த நிலையில் ஹங்கேரியில் தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை வீடியோ எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மேலும் தான் தங்கி இருக்கும் ஹோட்டல் அறையில் இருந்து பார்க்கும்போது புதாபெஸ்ட் நகர் எவ்வளவு அழகாக இருக்கிறது என்பதை புகைப்படங்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இளையராஜா வெளியிட்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை பார்த்தவர்கள் கூறியிருப்பதாவது என் அறையை பார், ஊரைப் பார் என்று இளையராஜாவும் புகைப்படம் வீடியோ வெளியிடுகின்றாரே. வழக்கமாக இந்த வேலையை விக்னேஷ் சிவன் தானே செய்வார் ஆனால் அழகை ரசித்து புகைப்படம் வெளியிடுவது தவறு இல்லை இசைஞானிக்கு இவ்வளவு அழகாக புகைப்படம் எடுக்க தெரியும் என்பது தெரியாமல் போய்விட்டதே என்கின்றார்கள் ரசிகர்கள். முன்னதாக ஹங்கேரிக்கு செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த இளையராஜா அங்கு 7 மணி நேரம் காத்திருந்து விமானம் ஏறி இருக்கிறார். மேலும் சென்னையில் கன மழை பெய்தால் விமானம் புறப்பட தாமதமாகிவிட்டது துபாய்க்கு சென்று அங்கிருந்து அங்கீகரிக்கு சென்று இருக்கின்றார்.
Categories