Categories
பல்சுவை

என்ன? உடம்பில் பிளாஸ்டிக் இருக்கிறதா….? வெளியான ஷாக் நியூஸ்…. இதோ முழு தகவல்….!!!

இன்றைய காலகட்டத்தில் பிளாஸ்டிக் என்பது மக்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு பொருளாக மாறிவிட்டது. இந்நிலையில் பிளாஸ்டிக் நாம் பயன்படுத்தும் பொருள்களில் மட்டும் இல்லாமல் நம்முடைய உடம்பிலும் இருப்பதாக அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது நாம் சாப்பிடும் பொருட்கள் மூலமாக நம்முடைய உடம்பில் 0.07mm அளவிற்கு பிளாஸ்டிக் இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இது மனிதர்களின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தை சோதித்து பார்த்தபோது தெரியவந்துள்ளது. இந்த பிளாஸ்டிக் நாம் சாப்பிடும் உணவு பொருட்களில் சேர்க்கக்கூடிய உப்பின் மூலமாக கூட உடம்பில் சேர்வதாக கூறுகின்றனர். மேலும் கடலில் பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதால் அதில் இருந்து எடுக்கக்கூடிய உப்பிலும் பிளாஸ்டிக் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |