Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

என்ன? உண்டியலில் இவ்வளவு பெரிய தொகையா?…. ஆச்சரியத்தில் பக்தர்கள்…!!

பிரசித்தி பெற்ற கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எண்ணப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் அருகே சித்தலூர் பகுதியில் பிரசித்தி பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இருக்கும் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதற்கு இந்த சமய அறநிலையத்துறை துணை ஆணையர் சிவாகரன் தலைமை தாங்கினார்.

இந்த உண்டியலில் 7,94,149 ரூபாய் இருந்தது. இதில் 68 கிராம் தங்கம் மற்றும் 33 கிராம் வெள்ளியும் இருந்தது. இந்த காணிக்கை எண்ணும் பணியில் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மேலும் செயல் அலுவலர் கார்த்திகேயன், கோவில் தர்மகர்த்தா கள் மற்றும் கோவில் பூசாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Categories

Tech |