பிரசித்தி பெற்ற கோவிலின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் பகுதியில் பிரசித்தி பெற்ற தாணுமாலயா சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும்.
இந்நிலையில் நேற்று இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்களின் பெண்கள் ஆகியோர் ஈடுபட்டனர். மேலும் உண்டியலில் 10,63,542 ரூபாயும், 11 கிராம் வெள்ளியும், 5 கிராம் தங்கமும் இருந்தது.