Categories
உலக செய்திகள்

என்ன உயிரோடு இருக்காங்களா?…. சரணடைந்த உக்ரைன் வீரர்கள்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

ரஷ்ய கடற்படையினரால் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட உக்ரைன் வீரர்கள்  தற்பொழுது உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரஷ்யா உக்ரேன் மீது 6-வது நாளாக முழு வீச்சில் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா உக்ரைன் மீது மும்முனை தாக்குதல்களை நடத்தி வருவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் உக்ரைனின் ஏராளமான ராணுவ இலக்குகளை தாக்கி அளித்துள்ளனர். இந்நிலையில் உக்ரைனும் ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. மேலும் ரஷ்யா உக்ரைனின் தலைநகரான கீவ்வை  நகரம் சுற்றி தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமை உக்ரைனில் உள்ள பாம்பு தீவில் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அந்தப் பகுதிக்கு ரஷ்ய போர்க் கப்பல் ஒன்று வந்தது. அப்போது அந்தக் கப்பலில் உள்ள கேப்டன் உக்ரேன் வீரர்களை ஆயுதங்களை கைவிட்டு சரணடையுமாறு கூறியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஆடியோ பதிவு ஒன்று இணையதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து அந்த தீவில் ரஷ்ய போர்க் கப்பல் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 13 உக்ரைன் வீரர்கள் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டனர். இதற்கு உக்ரைன் அதிபரும் இரங்கல் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பாம்பு தீவில் ரஷ்ய படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட உக்ரைன் வீரர்கள் 13 பேர் உயிருடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக உக்ரைன் கடற்படை கூறுகையில் “ரஷ்யப் படையினர் இருமுறை நடத்திய தாக்குதலில் தீவில் இருந்த உக்ரைன் படையினர் முறியடித்ததாகவும், ஆனால் ஆயுதங்கள் இல்லாமல் மேற்கொண்டு சண்டையிட முடியாது என்றுஅவர்கள் சரணடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரஷ்ய படையினரிடம் சரணடைந்த உக்ரைன் வீரர்கள் கிரிமியா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு கைதிகளாக அடைத்து வைத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ரஷ்ய படையினரால் கைது செய்யப்பட்டுள்ள வீரர்கள் நலமுடன் இருப்பதாகவும் அவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும்” தெரிவித்துள்ளது.

Categories

Tech |