Categories
தேசிய செய்திகள்

என்ன ஏதோ சத்தம் கேட்குது…? “வாஷிங் மெஷின்க்கு விசிட்டிங் கொடுத்த நல்ல பாம்பு”… ஆடிபோன குடும்பம்…!!!

வாஷிங்மெஷினில் நல்ல பாம்பு படமெடுத்து ஆடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், மகிபால் செருவு பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாஸன் என்பவர் தனது வீட்டில் உள்ள வாஷிங்மெஷினில் துணிகளை துவைப்பதற்கு சென்றுள்ளார். அங்கு சென்று வாஷிங் மிசினை திறந்த பொழுது பதுங்கி இருந்த நல்ல பாம்பு திடீரென்று படமெடுத்து ஆடியது. இதை கண்டு ஸ்ரீநிவாஸ் அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். பின்னர் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வாஷிங் மெஷினில் இருக்கும் பாம்பை வேடிக்கை பார்த்து சென்றனர்.

அதில் சிலர் தங்களின் செல்போன்களில் பாம்பு படமெடுத்து ஆடுவதை பதிவுசெய்தனர். இதையடுத்து பாம்பு பிடிக்கும் நபரை அழைத்து வந்து, அந்த பாம்பை பிடித்து சென்ற வனத்துறையினர் காட்டுப்பகுதியில் சென்று விட்டனர். வாஷிங்மெஷினில் பாம்பு படமெடுத்து ஆடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |