Categories
கிரிக்கெட் விளையாட்டு

என்ன ஒரு அற்புதம்…! எனக்கு பயமா இருக்கு…. இந்தியாவை புகழ்ந்த ஏபிடி …!!

ஆஸ்திரேலிய அணியை சொந்தமண்ணில் வீழ்த்திய இந்தியாவிற்கு ஏபி டிவில்லியர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.  

இந்திய அணியானது ஆஸ்திரேலியாவை டெஸ்ட் தொடரில் அதன் சொந்த மண்ணிலேயே 2-1 என்ற கணக்கில் வென்றது. மேலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிசப் பண்ட் 89 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும் ஷீப்மன் கீழ் 91 ரன்கள் எடுத்தும் புஜாரா 56 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் அபாரமான சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். இவ்வாறு இந்தியாவின் அனைத்து இளம் இந்திய வீரர்களும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பிரகாசித்தார்கள். மேலும் ஷர்துல் தாகூர் சிராஜ் இருவரின் அபாரமான பந்து வீச்சில் நடராஜன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இவ்வாறாக இந்தியா அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே புரட்டிப் போட்டது என்று பல ஆஸ்திரேலிய ஊடகங்கள் கதறிக்கொண்டிருக்கின்றனர். இச்சமயத்தில் இந்தியாவின் வெற்றி குறித்து ரசிகர்களால் 360 டிகிரி வீரர் என்று செல்லமாக அழைக்கப்படும் சவுத் ஆப்பிரிக்கா வீரரான ஏபி டிவில்லியர்ஸ் தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “என்ன அற்புதமான மேட்ச் இது! இந்திய அணியின் தைரியம் அச்சுறுத்துகிறது, ரிசப் பண்ட் 17, ஸ்வீட் நம்பர் 17 , Well Played Young man! டெஸ்ட் கிரிக்கெட் அதற்குரிய மிகப்பெரிய சிறப்பாக அமைந்தது” பாராட்டியுள்ளார். மேலும் அடுத்தபடியாக இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.

Categories

Tech |