பிரேசிலில் பழைய கார்களின் உதிரி பாகங்களால் விமானம் உருவாக்கப்பட்டு வானில் பறந்து சாதனை படைத்துள்ளது.
பிரேசில் நாட்டில் உள்ள ரியோ கிராண்டே டோ நோர்டே பகுதியைச் சேர்ந்த ஜெனிசிஸ் கோம். இவர் பழைய கார் மோட்டார் சைக்கிள் லாரி மிதிவண்டி போன்ற வாகனங்களின் உதிரி பாகங்களை கொண்டு ஹெலிகாப்டர் ஒன்றை வடிவமைத்துள்ளார். இந்த ஹெலிகாப்டர் வெற்றிகரமாக விண்ணில் பறந்துள்ளது. மேலும் இந்த விமானம் வோல்க்ஸ்வேகன் பீட்டில் இன்ஜின் கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வாகனங்கள் ஓடும் சாலையை தனது விமானத்தின் ஓடு தளமாக பயன்படுத்தி அவர் தனது ஹெலிகாப்டரை விண்ணில் பறக்க வைத்துள்ளார்.
இதனை அருகில் இருந்த மக்கள் படம்பிடித்து இணைய தளங்களில் பதிவேற்றி உள்ளனர். தன்னுடைய சிறுவயது முதலே ஹெலிகாப்டரை இயக்க வேண்டும் என்று கனவு கண்டு வந்த அவர் தனது கனவை நிறைவேற்ற வேண்டும் என எண்ணி சொந்தமாக ஒரு ஹெலிகாப்டர் தயாரித்து இயக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், விரைவில் புது ஹெலிகாப்டரை தயாரித்து பறக்க வைப்பதே எனது லட்சியம் என கூறியுள்ளார்.