சிவகங்கை மாவட்டம் கொளுஞ்சிப்பட்டியில் கிராம மக்கள் மழை வேண்டி மீன்பிடி திருவிழா நடத்தினர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கொளுஞ்சிப்பட்டியில் கிராம மக்கள் மழை வேண்டி மீன்பிடி திருவிழா நடத்தினர். அதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அங்கு தண்ணீரில் துள்ளி ஓடிய மீன்களை ஆவலுடன் சாக்குப்பையில் பிடித்தனர்.
மேலும் இந்த திருவிழாவில் ஒருவருக்கொருவர் ஒற்றுமையை வெளிப்படுத்தினார்கள். கண்மாயில் தேடி மீன்களை சேகரித்து அக்கம் பக்கத்தினருக்கும், மீன் கிடைக்காதவர்களுக்கும் கொடுத்து ஒருவருக்கொருவர் மகிழ்ந்தனர். இதனால் மீன்பிடி திருவிழா களைகட்டியது.