ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தில் வசித்து வரும் தலித் சமுதாய இளைஞரான ராகேஷ் மேக்வால் என்பவர் கடந்த 27-ஆம் தேதி உள்ளூர் போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில், முன் விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதி அருகே மது குடிக்க வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அவர்கள் மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தமது தொண்டைக்குள் வலுக்கட்டாயமாக புகுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தன்னை அவர்கள் சாதிய அவதூறுகளால் திட்டினார்கள் எனவும் ராகேஷ் புகாரில் கூறியுள்ளார். அந்த புகாரின் பேரில் உமேஷ் ஜாட் மற்றும் பீர்பால் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.