Categories
உலகசெய்திகள்

என்ன ஒரு தாராள மனசு…. கொடூரமான தாக்குதலை சமாளிக்க…. கூடுதல் நிதியுதவி….!!

அமெரிக்கா நாடு உக்ரைனின் பாதுகாப்பிற்கு  100 மில்லியன்  டாலர்களை வழங்குகிறது.

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிறது. உக்ரேனின் தலைநகரான கீவ் மற்றும் மரியுபோல் போன்ற பல இடங்களில் கட்டிடங்கள் எலும்புக்கூடுகளை போல் காட்சி அளிக்கின்றன.  இந்நிலையில் அமெரிக்கா உக்ரைன் நாட்டின்  பாதுகாப்பிற்கு  100 மில்லியன் டாலர்களை வழங்குகிறது.

இது குறித்து அமெரிக்க நாட்டின் வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளிங்கன் தனது டுவிட்டரில் பக்கத்தில் கூறியதாவது  “புதினின் கொடூரமான தாக்குதலில் இருந்து உக்ரைன் பொதுமக்களை பாதுகாப்பதற்கும் உக்ரேனிய ராணுவ பாதுகாப்பு படையினர் மற்றும் தேசிய போலீஸ் படையினருக்கு பாதுகாப்பு கவசம், வாகனங்கள், உபகரணங்கள் போன்ற சிவில் பாதுகாப்பு உதவிகாக அந்நாட்டுக்கு  கூடுதலாக  100  மில்லியன் டாலர்  (அதாவது இந்திய நாட்டின் மதிப்புன் படி  750 கோடி) வழங்கப்படும்”   என்று கூறியுள்ளார்.

Categories

Tech |