தனிமைப்படுத்த தவறி வெளியில் சுற்றியதால் இளம் பெண்ணுக்கு 6500 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
பிரிட்டனில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை ஆரம்பித்திருக்கும் நிலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக பட்டுள்ளன. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதமும் கடுமையான தண்டனையும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கேரிஸ் என்ற 22 வயது இளம்பெண் சல்போர்டில் இருந்து ஜெர்சிக்கு பயணம் செய்தார். பிரிட்டனில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டபகுதிகளில் இதுவும் ஒன்று என்பதாலும் விமானத்தில் அவரது அருகில் இருந்தவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்பதாலும் அவரை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் கேரிஸ் St.Ouen’s Bayவில் உள்ள El Tico உணவகத்திற்கு சென்றதோடு அதுதொடர்பான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து விதிமுறைகளை ஆராய்ந்து வரும்குழு கேரிசை தொலைபேசியில் தொடர்பு கொண்டனர். ஆனால் அவரிடம் பேச முடியவில்லை. பிறகு மூன்றாவது நாள் St.Ouen’s Bay பகுதியில் சுற்றி வந்துள்ளார். எட்டு நாட்களுக்குப் பிறகு பரிசோதனையில் ஈடுபட வேண்டும். இதனையும் அவர் மீறியுள்ளார்.
எனவே அவருக்கு 6,600 டாலர் அபராதம் அல்லது 6 மாத சிறை தண்டனை என கூறப்பட்டது. இதுகுறித்து மாபியா என்பவர் கூறுகையில் “தனிமைப் படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி தெரிவித்த பிறகும் ஒருவர் மற்றவர்களின் ஆரோக்கியத்தை கெடுக்கும் படி நடப்பது வருத்தத்திற்குரியது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
அதோடு நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கும் விதிமுறைகளையும் சட்டத்தையும் பின்பற்ற வேண்டும். அதிகாரிகள் அறிவுறுத்தியும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் வெளியில் சென்றுள்ளார் கேரிஸ். அவரைத் தேடி வீட்டிற்கு அதிகாரிகள் சென்றபோது அவர் இல்லை என்றாலும் அவரது இன்ஸ்டாகிராம் திரைப்படம் மூலமாக சிக்கியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.