Categories
பல்சுவை

என்ன ஒரு பாசம்!…. நடுவில் சிறுவன்!…. சுற்றி நாய்க் குட்டிகள்…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!!

நாய்கள் நன்றி மறப்பதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், அது நம் மீது மிகுந்த பாசத்துடன் இருக்கும் என்பதிலும் சந்தேகத்திற்கு இடமில்லை. அதை உணர்த்தும் அடிப்படையில் தற்போது  இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி பலரின் கவனங்களை ஈர்த்துள்ளது. தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு சிறுவன் தரையில் படுத்து இருக்கிறான்.

அப்போது அவனை சுற்றியும், மேலேயும் கொழுகொழு வென்று கிட்டத்தட்ட 4 நாய்குட்டிகளும், ஒரு பெரிய நாயும் நிற்கிறது. அந்த நாய்க் குட்டிகள் சிறுவனை தங்களது பாச மழையில் நனைய செய்து கொண்டு இருக்கிறது.

இதனிடையில் அச்சிறுவனோ நாய்களின் கொஞ்சலில் திக்கு முக்காடிக்கொண்டு இருக்கின்றான். இருப்பினும் அந்த நாய்கள் அவனை விடுவதாய் இல்லை. பல பேரின் கவனத்தை ஈர்த்த இந்த வீடியோ டுவிட்டரில் Animalesybichos என்ற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

Categories

Tech |