Redbull கம்பெனியின் Market Strategy குறித்து பின்வருமாறு காண்போம். 1994-ஆம் ஆண்டு லண்டனில் Redbull-ஐ லான்ச் செய்தனர். அப்போதைய காலகட்டத்தில் Coca-Cola, Pepsi போன்ற கம்பெனிகள் மிகவும் புகழ்பெற்றது. எனவே வளர்ந்து வரும் Redbull நிறுவனம் விளம்பரத்திற்காக பணத்தை செலவிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் லண்டனில் Redbull-ஐ பிரபலமாக்க தீவிரமாக யோசித்தனர்.
அதன் விளைவாக காலியான Redbull பாட்டில்களை லண்டனில் இருக்கும் பேருந்து நிலையம், பூங்கா, ரயில் நிலையம் போன்ற இடங்களில் இருக்கும் அனைத்து குப்பைத் தொட்டிகளிலும் நிரப்பி வைத்தனர். அதனைப் பார்த்த பொதுமக்கள் ஏராளமானோர் Redbull எனர்ஜி ட்ரிங்க்கை வாங்கி அருந்துகின்றனர் என நினைத்தனர். அதன்பிறகு அனைத்து மக்களும் Redbull-ஐ famous drink என நினைத்து வாங்கி குடித்தனர்.