Categories
தேசிய செய்திகள்

“என்ன ஒரு பெருந்தன்மை” மாமியாரை அருவாள் மனையால் வெட்டிய மருமகன்…. வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம்….!!!!!

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த சுப்ரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 28ஆம் தேதி இவர் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதில் வீட்டில் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் கோபமடைந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த அரிவாள் மனையை  எடுத்து தனது மாமியாரின் முதுகில் வெட்டியுள்ளார். மாமியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுப்பிரமணி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த சேலம்  மகளிர் நீதிமன்றம் சுப்பிரமனிக்கு பத்து வருடம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கடந்த மே 25ஆம் தேதி தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரமணி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி பரத் சக்கரவர்த்தி முன் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது சுப்ரமணி சார்பில் மனுதாரரும் அவரது மாமியாரும் சமாதானம் ஆகிவிட்டதால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என கோரப்பட்டது. அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்த மனுதாரரின் மாமியார் தன்னுடைய மகள் மருமகனுடன் வாழ வேண்டும் அவர்களது குழந்தைகளை வளர்க்க வேண்டும். அதனால் தங்களுக்குள் சமாதானம் ஆகிவிட்டதால் மருமகனை மன்னித்து விட்டதாக தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். இதனை ஏற்று நீதிபதி தண்டனை விதிக்கப்பட்ட பின்பும் குடும்ப பிரச்சினையும் உயர்நீதிமன்றம் தனது அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்பதால் மனுதாரரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளார்.

Categories

Tech |