பிரசித்திபெற்ற கோவிலின் அன்னதான உண்டியலின் மூலம் ரூபாய் 34 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகராஜா திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். இந்தக் கோவிலின் முன்பாக பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் அன்னதான உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் மாதந்தோறும் எண்ணப்படும். அதேப்போன்று இம்மாதமும் உண்டியல் எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கு கோவில் கண்காணிப்பாளர் சிவகுமார் பொறுப்பேற்றார். இதன் மூலமாக 34,641 ரூபாய் கிடைத்துள்ளது.