சவுதி நாட்டு இளவரசரின் குதிரை சவுதி கோப்பை குதிரைப் பந்தய தொடரில் வெற்றி பெற்று அவருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
சவுதியில் குதிரைப் பந்தய தொடர் நடைபெற்றது. அதில் அந்நாட்டு இளவரசர் சவுத் பின் சல்மானின் குதிரை வெற்றி பெற்று, கோப்பையை கைப்பற்றியது. இளவரசரின் ‘எம்ப்ளம் ரோட்’ குதிரையானது, 1800 மீட்டர் பந்தய தூரத்தை ஒரு நிமிடம் ஐம்பது வினாடிகளில் கடந்து சாதனை புரிந்துள்ளது.
இதனையடுத்து அந்த குதிரையின் உரிமையாளரும் மற்றும் சவுதி இளவரசருமான சவுத் பின் சல்மானுக்கு கோப்பையுடன் பத்து மில்லியன் டாலர் பரிசு தொகையாக வழங்கப்பட்டது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 75 கோடி ரூபாய் இந்த பரிசு தொகையின் மதிப்பு ஆகும்.