ஜெர்மனியில் முதன்முதலாக உலகையே அச்சுறுத்தி வரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் அனைவரையும் 4 ஆவது டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஜெர்மனியில் முதன்முதலாக உலகை அச்சுறுத்தி வரும் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்ட 60 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் ஜெர்மனி நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சர் ஓமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த அனைவரும் கொரோனா தொடர்பான தடுப்பூசியின் 4 ஆவது டோஸ்ஸை செலுத்தி கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பல முக்கிய தகவல்களையும் அவர் பரிமாறியுள்ளார். அதாவது கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்பாக விடுதிகள், தனியார் கூட்டங்கள் உட்பட அனைத்திற்கும் தடை விதிப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.