தன்னை கற்பழித்த நபருக்கு ஜாமீன் வழங்கிய காரணத்தினால் 16 வயது இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை சேர்ந்த 16 வயது இளம்பெண் தனது தந்தை மற்றும் வளர்ப்பு தாயுடன் வாழ்ந்து வந்தார். இவரது வளர்ப்பு தாயின் உறவினர் ஒருவரால் இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கற்பழிக்கப்பட்டார். சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஆனால் தற்போது அவருக்கு ஜாமின் கிடைத்து வெளியில் வந்துள்ளார். இதை அறிந்த பாதிக்கப்பட்ட பெண் தன்னை கற்பழித்த அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது என்ற விரக்தியில் வீட்டின் அறையிலிருந்த பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.