திருமணம் செய்ய வற்புறுத்தியதால் 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தற்கொலை முயற்சி செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகில் இடையவலசை கிராமத்தில் வசித்து வருபவர் மந்தை ராஜன். இவர் தனியார் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். மந்தைராஜன் அதே பகுதியை சேர்ந்த பிளஸ் 1 மாணவியை தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார் .
அதற்கு அந்த மாணவி மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது .ஆனால் தொடர்ந்து மாணவியிடம் மந்தைராஜன் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுதியுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அந்த மாணவி நேற்று எலி மருந்தைத் சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இதைஅறிந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மாணவிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்த மேலூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமாமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் மந்தைராஜன் திருமணத்திற்கு வற்புறுத்தியதுதான் காரணம் என்பதை தெரிந்துகொண்ட காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் .