கன்னியாஸ்திரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜன்பேட்டை பகுதியில் தேவதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கன்னியாஸ்திதியான அன்பு விஜய் ஞான ஜோதி(27) என்ற மகள் இருந்துள்ளார். இவர் நாகர்கோவில் அருகே இருக்கும் மடத்தட்டுவிளை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இதற்காக வேறு சில கன்னியாஸ்திரிகளுடன் ஞானஜோதி ஒரு வாடகை வீட்டில் தங்கியுள்ளார்.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஞான ஜோதி திடீரென விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சக கன்னியாஸ்திரிகள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி ஞான ஜோதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அன்பு விஜய் ஞானஜோதி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.