Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

என்ன காரணமாக இருக்கும்…? திடீரென செத்து மிதந்த மீன்கள்…. போலீஸ் விசாரணை…!!

குளத்தில் வளர்க்கப்பட்ட மீன்கள் திடீரென செத்து மிதந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோதைச்சேரியில் உள்ள வேட்டைக்காரன் குளம் மீன் வளர்ப்பதற்காக ஏலம் விடப்பட்டது. இந்நிலையில் முத்துப்பாண்டியன் என்பவர் குத்தகைக்கு எடுத்து குளத்தில் மீன்கள் வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குளத்தில் இருந்த மீன்கள் திடீரென செத்து மிதந்ததை பார்த்து முத்துப்பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார். மீன்கள் இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குளத்தில் யாரேனும் விஷம் கலந்தனரா? அல்லது ரசாயன பொருட்கள் கலந்ததால் மீன்கள் இறந்ததா?என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |