பிரபல நாட்டில் நடந்த துப்பாக்கி சூட்டில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் வாழும் மக்கள் தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. இந்நிலையில் இண்டியானா மாகாணத்தில் உள்ள புளூங்டன் நகரில் ஒரு வணிக வளாகம் அமைந்துள்ளது. அந்த வணிக வளாகத்தில் நேற்று முன்தினம் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு நபர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக சுட ஆரம்பித்தார்.
இதனை பார்த்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். இந்த விபத்தில் 19 வயது வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலர் காயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.