Categories
Uncategorized

என்ன காரணமாக இருக்கும்?…. பிரபல நாட்டில் “மனைவி மற்றும் மகளை படுகொலை செய்த நபர்”…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

பிரபல நாட்டில் தாய் மற்றும் மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள great welding field பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த jillu nash என்ற பெண் தனது கணவர் மற்றும் மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர்களது வீட்டில் கடந்த மாதம் 8-ஆம்  தேதி ஏதோ ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டிற்குள் சென்று சோதனை செய்தபோது அங்கு jillu nash மற்றும் அவரது மகள்  louise  ஆகிய  2  பேரும் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் 2  பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில் jillu கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டதும், அவரது மகள் louise வயிற்றில்  கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் காவல்துறையினர் அதை வீட்டில் பதுங்கி இருந்த ஒரு நபரை கைது செய்தனர். அந்த நபரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் peter nash என்பதும், அவர் jillu nash-வின்  கணவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும்  இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார்  அவர் எதற்காக தனது மனைவி மற்றும் மகளை கொலை செய்தார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் இன்று போலீசார் அவரை ipswich மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

Categories

Tech |