மாணவி மீது ஆசிட் வீசிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள ஒரு பகுதியில் 17 வயது மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் அருகே அமைந்துள்ள பள்ளிக்கு தனது தங்கையுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர் முகத்தில் ஆசிட் வீசியுள்ளனர். இதில் அலறி துடித்த அந்த மாணவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர் அதிக காயங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ஒரு வாலிபரை கைது செய்துள்ளனர். மற்றொருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.