Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? இறந்து கிடந்த முதியவர்… போலீசார் தீவிர விசாரணை…!!

சென்னையை சேர்ந்த முதியவரின் உடல் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பேரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அடுத்துள்ள வடவத்தூர் அருகே உள்ள தலைமலை வனப்பகுதியில் உள்ள மரம் ஒன்றில் முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக எருமப்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து நடத்திய விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த வீராசாமி என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் கடந்த 6 மாதங்களாக திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் உள்ள அவரது மகள் ஜீவா வீட்டில் தங்கியிருந்துள்ளார். இதனைதொடர்ந்து உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த முதியவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை வீட்டு சென்றுள்ளார். இதற்கு பின் அவர் வீட்டிற்கு செல்லவில்லை என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |