வனப்பகுதியில் யானை இறந்து கிடந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப் பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. கோடை காலம் காரணமாக வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் பில்லூர் அணை பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காட்டு யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் கால்நடை மருத்துவர் ஆகியோர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து கிடந்தது 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஆகும். சோதனை அறிக்கை வந்த பிறகே யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என கூறியுள்ளனர்.