இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கொத்தனேரி கிழக்கு தெருவை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகள் ஜெகதீஸ்வரி. இவர் டிப்ளமோ பார்மசி படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார்.இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து ஜெகதீஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ஜெகதீஸ்வரி தாய் மாரீஸ்வரி போலீசில் புகார் அளித்துள்ளார். அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஜெகதீஸ்வரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிந்து அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.