Categories
உலக செய்திகள்

என்ன காரணமா இருக்கும்….? ஏரியில் கவிழ்ந்த படகு…. 11 பேர் பலியான சோகம்….!!

ஏரியில் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாட்டின் மத்திய கிழக்குப் பகுதியில் டாங்கன்யிகா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் டாங்கன்யிகா என்ற ஏரி உள்ளது. இங்கு படகு சவாரி மிகவும் பிரபலமானதாகும். இந்த நிலையில் 80 க்கும் அதிகமான பயணிகளுடன் ஒரு படகு டாங்கன்யிகா ஏரியின் நடுபகுதியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென கவிழ்ந்துள்ளது. இதனால் படகில் பயணித்த அனைவரும் நீரில் முழ்கி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இதனை கண்டதும் அங்கு மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்பு பணிகளில் இறங்கி நீரில் தத்தளித்து கொண்டிருந்த 76  பேரை உயிருடன் மீட்டுள்ளனர். இருப்பினும் 7 சிறுவர்கள் உட்பட 11 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து ஏற்படுவதற்கான காரணம் படகுகளில் அதிக அளவு பயணிகளை ஏற்றி சென்றதே ஆகும் என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். இருப்பினும் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |