கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள மலையம்பட்டி காட்டுக்கொட்டாய் பகுதியில் தமிழரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்லக்கிளி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் செல்லக்கிளி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த இளம்பெண் தனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் இளம்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி செல்லக்கிளி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வயிற்று வலி காரணமாக செல்லக்கிளி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.