கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள ரெட்டியார்பட்டி காந்தி நகரில் ஆட்டோ ஓட்டுனரான மாரியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்து என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஆலங்குளத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்து தலையில் தேய்ப்பதற்காக வைத்திருந்த மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மயங்கிய நிலையில் இருந்த இந்துவை மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் இந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.